மெக்கா, நவ 18 - சவூதி அரேபியாவில் உள்ள மெக்கா நகரிலிருந்து உம்ரா புனித யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, மெடினா திரும்பும் வழியில் டீசல் லாரியுடன் மோதியதில், குறைந்தது 42 இந்தியப் பிரஜைகள் உயிரிழந்தனர்.
பேருந்திலிருந்த பயணிகளில் பெரும்பாலோர் தெலுங்கானாவை சேர்ந்தவர்கள் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்தில் பேருந்து முற்றாகக் கருகியதால் சடலங்களை அடையாளம் காண்பது பெரும் சிரமமாக இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.
மெக்காவில் உம்ரா சடங்குகளை முடித்து விட்டு திரும்பும் போது ஏற்பட்ட இந்த விபத்தில், ஒரேயொருவர் உயிர் தப்பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில், ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் வாயிலாக தெலுங்கானா அரசாங்கம் அடுத்தக் கட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளது.




