கோத்தா கினாபாலு, நவ 17- சபா மாநிலத்தின் 17-வது சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரக் களம் தற்போது மாநிலம் முழுவதும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
தேசிய, மாநிலத் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் எனப் பலரும் பல்வேறு இடங்களில் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.
சபா சட்டமன்றத் தேர்தலின் பிரச்சாரத்தில் மூன்றாவது நாள் ஆகும். கோத்தா கினபாலு, பெனாம்பாங் மற்றும் புத்தான் போன்ற முக்கியப் பகுதிகளில் உள்ள சாலைகளில் தற்போது அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகள் மற்றும் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
அனைத்துக் கட்சித் தலைவர்களும் மக்களைச் சந்தித்து வருவதால், வரும் நாட்களில் பிரச்சாரத்தின் வேகம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.






