கோம்பாக், நவ 17 — எம்பிஐ அறிமுகப்படுத்திய பெண்களுக்கான வீட்டிலிருந்து பணிபுரியும் (WFH) கொள்கை, உற்பத்தித் திறனிலும் பணியாளர் நலனிலும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலை செய்கிற தாய்மார்கள் தங்களின் தொழிலையும் குடும்ப பொறுப்புகளையும் சிறப்பாக கையாள்வதற்கு, இந்தக் கொள்கையை ``Wanita Berdaya Selangor`` (WBS) நடத்தும் ஆய்விற்கு மாநில அரசு உட்படுத்தும் என பெண்கள் மேம்பாடு மற்றும் சமூக நலத்திற்கான மாநில செயற்குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி தெரிவித்தார்.
“WFH எனும் கொள்கை வீட்டிலிருந்தே முழுநேரப் பணியைச் செய்ய அனுமதிப்பதோடு மட்டுமல்லாமல், நெகிழ்வான நேரமும் பொறுப்புகளை நிறைவேற்ற வேலை செய்கிற தாய்மார்களுக்கு போதுமான வாய்ப்பையும் வழங்குகிறது,” என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.
இந்த திட்டம் பெண்கள் மேம்பாடு, நெகிழ்வான தொழில் வாய்ப்புகளை விரிவாக்குதல், வேலை மற்றும் குடும்ப பொறுப்புகளுக்கிடையிலான சமநிலையை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றில் மாநில அரசின் முயற்சிகளுடன் இணங்குகிறது.
இதற்கிடையில், இந்த ஆண்டில் கோம்பாக், கிள்ளான், உலு லங்காட் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் TalentCorp உடன் இணைந்து செயல்படுத்தப்பட்ட ``Career Comeback`` திட்டம் மூலம், தொழில்துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் முயற்சியில் 1,000க்கும் மேற்பட்ட பெண்களை ஈர்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.




