லங்காவி, நவ 17: பந்தாய் சேனாங்கில் இரண்டு வயதான ரஷ்ய சிறுவன் ``ஜெல்லிபிஷால்`` தாக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் உள்ளான்.
இந்தச் சம்பவம் காலை 7 மணியளவில், அந்த சிறுவன் தனது குடும்பத்தினருடன் கடலில் விளையாடிக் கொண்டிருந்தபோது நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.
சுல்தானா மலிஹா மருத்துவமனையின் அவசரப் பிரிவுக்கு
இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதாக லங்காவி அரசு பாதுகாப்பு படையின் (APM) பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
“அச்சிறுவனை குடும்பத்தினர் மயங்கிய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இரண்டு மணி நேர முயற்சிக்கு பின் அச்சிறுவன் மீண்டும் சுவாசிக்க தொடங்கினான்.
பின்னர் சிறுவன் அலோர் ஸ்டாரில் உள்ள சுல்தானா பஹியா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டான் என தெரிவிக்கப்பட்டது.
லங்காவி கடல்சார் பகுதியில் ``ஜெல்லிபிஷ்கள்`` காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அரசு பாதுகாப்பு படை பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.




