ad

மலேசியா வானிலை: இன்று மாலை 6 மணி வரை பல மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை

17 நவம்பர் 2025, 9:40 AM
மலேசியா வானிலை: இன்று மாலை 6 மணி வரை பல மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை
மலேசியா வானிலை: இன்று மாலை 6 மணி வரை பல மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை

கோலாலம்பூர், நவ 17- மலேசிய வானிலை ஆய்வுத் துறை, இன்று மாலை 6 மணி வரை தீபகற்ப மலேசியா, சரவாக், சபா மற்றும் லபுவான் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

METMalaysia வெளியிட்டுள்ள முகநூல் அறிக்கையின்படி, பெர்லிஸ், கெடா (சிக், பாலிங், கூலிம், பண்டார் பாரு), பினாங்கு, பேராக், பகாங் (கேமரன் மலை), சிலாங்கூர் (சபாக் பெர்ணம், உலு சிலாங்கூர், கோம்பாக், பெட்டாலிங், உலு லங்காட், சிப்பாங்), அத்துடன் கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா மத்திய பிரதேசங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதே எச்சரிக்கை நெகிரி செம்பிலான் (ஜெலுபு, சிரம்பான், கோலா பிலா, ரெம்பாவ், ஜெம்போல், தம்பின்), மலாக்கா (அலோர் காஜா, ஜாசின்), ஜோகூர் (தாங்காக், சிகாமட், மூவார், பத்து பஹாட், கிளுவாங், பொந்தியான், கூலாய், கோத்தா திங்கி, ஜோகூர் பாரு), சரவாக் (லுண்டு, காப்பிட், லிம்பாங்), சபா (சிபிடாங், டெனோம், கோலா பென்யூ, பியூஃபோர்ட், தாம்புனான், பாப்பார், புத்தான், பெனாம்பாங், கோத்தா கினபாலு, துவாரான், கோத்தா பெலுட், கூடாட்) மற்றும் லபுவான் ஆகிய பகுதிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடிக்கக்கூடிய அல்லது எதிர்பார்க்கப்படும் மழைப்பொழிவு, மணிக்கு 20 மி.மீட்டருக்கு அதிகமாக இருக்கும்போதே இந்த எச்சரிக்கை வெளியிடப்படுவதாகவும், இடியுடன் கூடிய மழைக்கான எச்சரிக்கைகள் பொதுவாக ஆறு மணி நேரத்திற்கு மிகாமல் இருக்கும் குறுகிய கால எச்சரிக்கை என்றும் METMalaysia தெரிவித்துள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.