புத்ராஜெயா, நவ 17- கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் புதிய மேயர் டத்தோ ஃபட்லுன் மக் உஜுட் புத்ராஜெயாவில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமைச் இன்று சந்தித்து பேசினார்.
மலேசியாவின் தலைநகரமான கோலாலம்பூரை மேலும் முன்னேற்றப்பட்ட மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த எதிர்காலத்தை நோக்கி இட்டுச்செல்லும் சில முக்கிய நிகழ்ச்சி நிரல்கள் குறித்து இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்டது.
முக்கியமாக, ‘River of Life’ திட்டத்தை வலுப்படுத்துதல், முறையாகத் திட்டமிடப்பட்ட நகர மேம்பாட்டுக்கான பாதையை அமைத்தல், ஒருங்கிணைந்த மையத்தின் (One Stop Centre - OSC) ஒப்புதலை விரைவுபடுத்துதல் மற்றும் நகர்ப்புறப் பொருளாதாரத்தில் சிறிய வியாபாரிகளுக்கும், சாலையோர வியாபாரிகளுக்கும் நியாயமான இடத்தையும், ஆதரவையும், வாய்ப்பையும் வழங்குவதன் மூலம் அவர்களின் சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துதல் ஆகியவை விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்களாகும்.
புதிய மேயரின் தொழில்முறை நிபுணத்துவம் மற்றும் முந்தைய அனுபவம், நிலையான மேம்பாட்டை வலுப்படுத்துவதோடு, கோலாலம்பூரை ஒரு போட்டித்தன்மை வாய்ந்த, வாழக்கூடிய மற்றும் MADANI மதிப்புகளுக்கு இணக்கமான உலகளாவிய தலைநகரமாகத் தொடர்ந்து எடுத்துச் செல்ல உதவும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.
முன்னாள் மேயர் டத்தோஶ்ரீ மைமுனா மொஹட் ஷெரிப் ஆற்றிய நல்ல பணிகளைத் தொடர்ந்து, கோலாலம்பூரின் பிம்பத்தை மேலும் பெருமைமிக்க நிலைக்கு உயர்த்துவதில் புதிய மேயரின் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன.




