ad

ASGG Gluta Genc Gummies–ல் தடை செய்யப்பட்ட மூலப்பொருள்- சுகாதார அமைச்சு உறுதி

17 நவம்பர் 2025, 9:34 AM
ASGG Gluta Genc Gummies–ல் தடை செய்யப்பட்ட மூலப்பொருள்- சுகாதார அமைச்சு உறுதி

புத்ராஜெயா, 17 நவம்பர்: ASGG Gluta Genc Glow Gummies என்ற உணவு பொருளின் விற்பனை மற்றும் விளம்பரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது . இதன் காரணம், 1983 ஆம் ஆண்டு உணவுச் சட்டத்தை மீறியது கண்டறியப்பட்டுள்ளது.

செயற்கை சோதனைகளில், இந்த கம்மிஸ் உள்ள குளுதாதயோன் எனும் மூலப்பொருள், 1985 ஆம் ஆண்டு உணவு விதிமுறைகளின் 26வது விதியின் 12வது அட்டவணையில் பட்டியலிடப்படாதது என்று கண்டறியப்பட்டது. இதனால், குளுதாதயோனை உணவுப் பொருளில் பயன்படுத்த அனுமதி இல்லை என்பதையும் சுகாதார அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.

மின்வணிக தளங்கள், குறிப்பாக Shopee, Lazada மற்றும் TikTok Shop மூலம் கம்மிஸ்கள் விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்துள்ளனர். இதுவரை கம்மிஸ் விளம்பரங்களை நிறுத்த 121 கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட தளங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் இதனை பயன்படுத்திய பொதுமக்கள் உடனடியாக உபயோகத்தை நிறுத்தி, அருகிலுள்ள மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெற வேண்டுமென்று சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.