ஷா ஆலாம், நவ 17- கடந்த எட்டு ஆண்டுகளாக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட் வாடகைத் திட்டம் மூலம் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட 1,361 குடும்பங்கள் பயனடைந்துள்ளதாக சிலாங்கூர் மாநில மந்திரி புசார், டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த தேவைப்படுவோருக்கு வழங்குவதற்காக, இந்தத் திட்டத்தின் கீழ் குடியிருப்புகளின் எண்ணிக்கையைச் சேர்க்க மாநில அரசு ஆண்டுதோறும் நிதி ஒதுக்குவதாகவும் அவர் கூறினார்.
சிலாங்கூர் வீட்டுவசதி மற்றும் சொத்து வாரியம் தற்போதுள்ள 1,199 ஸ்மார்ட் வாடகை வீட்டு எண்ணிக்கையை 2027-க்குள் மூவாயிரம் வீட்டு எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது என்று அவர் அறிவித்தார்
இந்த விரிவாக்கம் நேரடியாக மேம்பாட்டாளர்களிடமிருந்து வாங்குவது அல்லது இடாமான் மற்றும் ஹாரப்பான் எனப்படும் சிறப்பு வீட்டுத் திட்டங்களிலிருந்து பெறுவது மூலம் செயல்படுத்தப்படும்.
இந்தத் திட்டம், Rumah Selangorku திட்டத்தின் கீழ் வீடு வாங்க வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான வீட்டில் வாழ ஒரு வாய்ப்பை வழங்குகிறது என்று அவர் கூறினார்.




