கோலாலம்பூர், நவ 17- ஜப்பான் மாஸ்டர்ஸ் பொதுப் பூப்பந்து போட்டியின் மகளிர் இரட்டையர் இணை பெர்லி தான் - எம்.தீனா வாகை சூடிய நிலையில் துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மட் ஸாஹிட் ஹமிடி மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
இந்த வெற்றியானது நாட்டு மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் நாட்டின் பூப்பந்து துறையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்று நாட்டைப் பெருமைப்படுத்தியுள்ளனர்.
மலேசிய ஆட்டக்காரர்கள் இருவரும் அனைத்துலக ரீதியில் நாட்டின் நற்பெயருக்கு பெருமையைச் சேர்த்தனர்.
ஜப்பான் மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டியின் இறுதிப்போட்டியில் பெர்லிதான் - எம். தீனா இணை ஜப்பானின் ரின் இவாநாகா- நியெ நகநிஷியை 22-20, 21-19 என்ற புள்ளிகளில் வெற்றிக்கொண்டனர்.




