வாஷிங்டன், நவ 17 - உலகில் முதன் முறையாக H5N5 வகை பறவை சளிக் காய்ச்சல் மனிதருக்குத் தொற்றியுள்ளதை அமெரிக்க சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
வாஷிங்டனில் கண்டறியப்பட்ட இந்த நோயாளி உடல்நலக்குறைவு கொண்ட ஒரு முதியவர் ஆவார். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் பெற்று வருகிறார்.
வீட்டில் வளர்த்த கோழிகள், மற்றும் காட்டுப் பறவைகளுடன் அந்நபர் தொடர்பில் இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுவே தொற்றின் மூலமாக இருக்கலாம் என அதிகாரிகள் நம்புகின்றனர்.
தற்போது, அதிகாரிகள் நோயாளியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களையும் கண்காணித்து வருகின்றனர். இதற்கு முன் மனிதர்களில் காணப்படாத இந்த H5N5 என்ற புதியக் கிருமியை ஆய்வுகளும் உறுதிப்படுத்தியுள்ளன.
இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், பொதுமக்களுக்கு ஆபத்து குறைவாகவே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




