கோத்தா கினாபாலு, நவ 17- 17ஆவது சபா மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் இன்று மாலை சபா ஜி.ஆர்.எஸ் கூட்டணி அதன் தேர்தல் வாக்குறுதிகளை அறிமுகம் செய்யவிருக்கிறது.
இன்று தேர்தல் வாக்குறுதிகளை வெளியிடுவதால் சபா ஜி.ஆர்.எஸ் கூட்டணி தேர்தல் வாக்குறுதிகளை வெளியிடும் இரண்டாவது கட்சியாகும். கடந்த நவம்பர் 13ஆம் தேதி KDM கட்சி அதன் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டது.
சபா அனைத்துலக மாநாட்டு மையத்தில் இன்று ஜி.ஆர்.எஸ் கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தல் வாக்குறுதிகளை சபா மாநில நடப்பு பராமரிப்பு அரசாங்கத்தின் இடைக்கால முதலமைச்சர் டத்தோஶ்ரீ ஹஜிஜி நோர் வெளியிடுவார் என்று அட்டவணையிடப்பட்டுள்ளது.
சபா மாநில சட்டமன்ற தேர்தலில் சபா ஜி.ஆர்.எஸ் கூட்டணி 73 சட்டமன்ற இடங்களில் 55 இடங்களில் போட்டியிடுகிறது.




