ad

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ஹலால் சரிபார்ப்பு முறைமை உருவாக்குகிறது சிலாங்கூர்

17 நவம்பர் 2025, 1:43 AM
செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ஹலால் சரிபார்ப்பு முறைமை உருவாக்குகிறது சிலாங்கூர்

ஷா அலாம் 17 நவம்பர்: சிலாங்கூர் மாநிலத்தில் ஹலால் சான்றிதழ் சரிபார்ப்பு செயல்முறை அடுத்த ஆண்டில் இருந்து இன்னும் விரைவாகவும் பயனர் நட்பு முறையில் நடைபெறும் வகையில் புதிய டிஜிட்டல் முறையை அரசு அறிமுகப்படுத்த உள்ளது என்று மாநில புதுமை பண்பாட்டுக்குழு உறுப்பினர் டாக்டர் ஃபஹ்மி ஙா தெரிவித்தார்.

இந்த பயன்பாடு மலேசியா இஸ்லாமிய மேம்பாட்டுத் துறையான ஜாக்கிமின் ஹலால் அங்கீகரிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் மூலப்பொருட்களின் தரவுத்தளத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதால், பொதுமக்கள் எந்த கூடுதல் செயலியை பதிவிறக்காமல் நேரடியாக ஹலால் சரிபார்ப்பை செய்ய முடியும்.

“இந்த ஜாக்கிம் ஹலால் தரவுத்தளத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படுவதால், பயனர்கள் கூடுதல் செயலி தேவையில்லாமல் நேரடியாக ஹலால் தகவலைப் பெற முடியும். மக்களுக்கு ஹலால் தகவல்களை வேகமாக அணுகும் புதிய முறையை உருவாக்கி வருகிறோம்,” என்று அவர் நேற்று இரவு Dewan Bunga Kertas-ல் நடைபெற்ற ஸ்ரீ சித்தியா சட்டமன்ற தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் பேசியபோது தெரிவித்தார்.

மேலும் இந்த முறை chatbot தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சரிபார்ப்பு செயல்முறையை எளிமையாக்கும் என்றார். இந்த புதிய முறைமை செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் தயாரிப்பு தகவலை அரசின் அதிகாரப்பூர்வ ஹலால் தரவுத்தளத்துடன் பொருத்தி, சந்தையில் காணப்படும் போலியான அல்லது சந்தேகமான ஹலால் லேபிள்களிலிருந்து பயனர்களை பாதுகாக்கும்.

“அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இதனை உருவாக்கத் தொடங்குவோம் என்றார் அவர். சிலாங்கூர் 2026 பட்ஜெட்டில், சிலாங்கூர் அரசு RM200,000 ஒதுக்கி, வேகமான டிஜிட்டல் சரிபார்ப்புபை மேம்படுத்த உள்ளதாகவும், இதன் மூலம் ஹலால் சான்றிதழ் பெறும் செயல்முறை மேலும் விரைவாகவும், வெளிப்படையாகவும், ஒழுங்காகவும் இருக்கும் எனவும் கூறப்பட்டது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.