கரையான் அரிப்பால் அழிந்துவரும் கோப்பெங் தமிழ்ப்பள்ளிக்கு 14 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி

16 நவம்பர் 2025, 9:23 AM
கரையான் அரிப்பால் அழிந்துவரும் கோப்பெங் தமிழ்ப்பள்ளிக்கு 14 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி

கோப்பெங், நவ.16: கோப்பெங் தமிழ்ப்பள்ளி பல்லாண்டுகளாக கரையான் அரிப்பால் அழிந்து கொண்டு வருகிறது. இதற்கு தீர்வு காணும் பொருட்டு மத்திய அரசு 14 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மலேசிய கல்வி அமைச்சின் துணையமைச்சர் வோங் கா வோ நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஒன்றை செய்துள்ளார்.

நமது கோரிக்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி மானியமாக 14 மில்லியன் ரிங்கிட் வழங்கியுள்ளது. இதனைக்கொண்டு புதிய கட்டடத்தை இப்பள்ளி வளாகத்தில் விரைவில் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று கோப்பெங் நாடாளுமன்ற உறுப்பினர் தான் கா இங் மகிழ்ச்சியுடன் கூறினார்.

இந்த திட்டம் மலேசிய 13 வது திட்டத்தின் கீழ் வந்துள்ளது. இப்பள்ளி பழைமையான கட்டிடம் கொண்டபோதும், கரையான் அரிப்பால் பள்ளி பெரும் பாதிப்பை எதிர்நோக்கி வந்தது.

அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு கோப்பெங் இந்திய மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொண்டு வந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.இவ்வேளையில் பள்ளி நிர்வாகம், பள்ளி மேலாளர் வாரியம், பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் முன்னாள் மாணவ சங்கத்தினர் ஆகியோர் இங்கு புதிய கட்டிடம் உருவாக தங்களின் ஆதரவையும் , ஒத்துழைப்பையும் சிறப்பாக வழங்கினர் என்று அவர் பாராட்டினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.