ad

பிங்காஸ் பிளாஸ்: சிலாங்கூரில் வறுமையின் பிடியில் உள்ள குடும்பங்களுக்கான ‘மீட்சித் திட்டம்

15 நவம்பர் 2025, 1:31 PM
பிங்காஸ் பிளாஸ்: சிலாங்கூரில் வறுமையின் பிடியில் உள்ள குடும்பங்களுக்கான ‘மீட்சித் திட்டம்
பிங்காஸ் பிளாஸ்: சிலாங்கூரில் வறுமையின் பிடியில் உள்ள குடும்பங்களுக்கான ‘மீட்சித் திட்டம்

ஷா ஆலம், நவம்பர் 15 — 2026 சிலாங்கூர் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பிங்காஸ் (Bantuan Kehidupan Sejahtera Selangor) பிளாஸ் முன்னெடுப்பு, வறுமையின் பிடியில் உள்ள குடும்பங்களுக்கான ‘மீட்சித் திட்டமாக” (exit plan) இருக்கும். இது மிகவும் ஏழ்மையான குடும்பங்களின்  சுமைபோக்கியாக , அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக இன்னும் ஆதரவு தேவைப்படும் தலைவர்களை இலக்காகக் கொண்டுள்ளது.

பெண்கள் அதிகாரமளித்தல் மற்றும் நலத்துறை  ஆட்சிக்குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி கூறுகையில், இந்தத் திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர்களின் உதவித் தவணை முடிந்து போன குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களு - க்கான தொடர்ச்சியான, இலக்கான ஆதரவை உறுதிப் படுத்துகிறது. குறிப்பாக, அடுத்தடுத்து வறுமையின் வரம்பில்  வாழும் குழந்தைகள் அல்லது முதியோர்களை கவனித்துக் கொள்பவர்களுக்கு என்றார்.

“பிங்காஸ் பிளாஸ், மிகவும் விரிவான  வறுமையின் பிடியில் உள்ள குடும்பங்களுக்கு, ‘மீட்சித்  திட்டத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இரண்டு ஆண்டுகள் உதவி காலம் முடிந்தாலும், அடுத்தடுத்து  வறுமை வரம்புகளுக்குள் வாழும் குழந்தைகள் அல்லது முதியோர்களை கவனித்துக் கொள்பவர்களின்   போராட்டத்தில்   கை கொடுக்கும்  திட்டமாகும். 

“எனவே, இந்தக் குழுவைத் தொடர்ந்து ஆதரிக்கும் சாத்தியத்தை நாங்கள் பார்க்கிறோம். அதேசமயம், அவர்களை சிலாங்கூர் பெஞ்ஞாயாங் இல்திசாம் (Iltizam Selangor Penyayang - ISP) திட்டங்களுடன் இணைக்கிறோம். அதாவது, தொழில்முனைவு உதவி, தொழில் நுட்ப  பயிற்சி (TVET) வழி மற்றும் வருமானத்தை அதிகரிக்கும் முன்னெடுப்புகள் போன்றவைகளுக்கு தயார் படுத்துவது,” என்றார் அவர்.

அவர், நேற்று சிலாங்கூர் சட்டமன்றத்தில் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ  அமிருடின் ஷாரி அளித்த 2026 சிலாங்கூர் பட்ஜெட்டிற்கு பிறகு இதைத் தெரிவித்தார். அன்ஃபாலின் கூற்றுப்படி, மாநில அரசின் கூடுதல் RM 5 மில்லியன் ஒதுக்கீடு, புதிய தலையீட்டு திட்டங்களை மேம்படுத்தி வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளது.

“உதவி, மாதம் RM300 ஐ 24 மாதங்களுக்கு வழங்குவது போன்ற நிலையான முறையுடன் பிணைக்கப் படவில்லை. இப்போது, குடும்பத் தேவைகளின் அடிப்படையில் மிகவும் நெகிழ்வான வடிவத்தில் வழங்கப் படுகிறது. “பரம ஏழ்மை வகையில் வாழும்  சுமார் 1,400 குடும்ப தலைவர்கள் மீது கவனம் செலுத்தப் படுகிறது. அதில்  பலர் 65 முதல் 90 வயது வரை உள்ளவர்கள் மற்றும் ஸ்மார்ட் போன்களுக்கு அணுகல் இல்லாதவர்கள்.

எனவே, உதவி அணுகுமுறை அவர்களின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மிகவும் நெகிழ்வானதாகவும், தனிப் பயனாக்கப் பட்டதாகவும் இருக்க வேண்டும்,” என்றார் அவர்.அன்ஃபால் சேர்த்து கூறுகையில், பிங்காஸ் பிளாஸின் முழு விவரங்கள் முடிவுக்கு வருவதற்கு முன் மறு ஆய்வு செய்யப்படும். திட்டம் 2026 இல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இது ஏழ்மை ஒழிப்பு முன்னெடுப்பாக திறம் பட இருப்பதை உறுதிப்படுத்த. நேற்று, அமிருடின், அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்தப் படும் புதிய சிறப்பு முன்னெடுப்பு பிங்காஸ் பிளாஸ் (பிங்காசன்) ஐ அறிவித்தார்.

இது, குடும்பங்கள் அடிப்படை தினசரி தேவைகளை சந்திப்பதற்கு இலக்கான பண உதவியை வழங்குகிறது. அதாவது, உணவு, அத்தியாவசிய பொருட்கள், மற்றும் முதன்மை சுகாதார  தேவைகளை  பூர்த்தி  செய்ய வேண்டும். இதன் செயல்பாடு, உதவி பெறுநர்களின் தரவுகள் மற்றும் உண்மையான சூழ்நிலைகளால் வழிநடத்தப் படுகிறது.

உதவி உண்மையில் தேவைப்படும் நபர்களை அடைவதை உறுதிப்படுத்த பண ஆதரவுக்கு அப்பால், பெறுநர்கள் சிலாங்கூர்  சேஹாட்  இல் திசாம் மற்றும் பந்துவான் சேஹாட் சிலாங்கூர் போன்ற நலத் திட்டங்களுடன் இணைக்கப் படுகிறது. அமிருடின், பிங்காஸ் மற்றும் பிங்காசனுக்கான RM 103 மில்லியன் ஒதுக்கீட்டையும் அறிவித்தார்.

பிங்காஸின் கீழ், தகுதியான குடும்பங்கள் மாதம் RM300 ஐ 24 மாதங்களுக்கு பெறுகின்றன. அத்தியாவசியப் பொருட்கள், மருந்து சப்ளைகள், மற்றும் கல்வி உதவிகளை உள்ளடக்கியது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.