கோலாலம்பூர், நவம்பர் 15 - இந்தோனேசியாவின் தலாவுட் தீவில் இன்று பிற்பகல் 1.33 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 4.0 டிகிரி வடக்கு மற்றும் 126.9 டிகிரி கிழக்கில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக மெட்மலேசியா அறிக்கை தெரிவித்துள்ளது. இது தலாவுட் தீவுகளுக்கு கிழக்கே சுமார் 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. "மலேசியாவிற்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று ஆரம்ப மதிப்பீட்டில் கண்டறியப்பட்டுள்ளது" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




