ad

சுக்மா வசதிகள் ‘வெள்ளை யானைகள்’ ஆக மாறாது — நிர்வாகக் குழு

15 நவம்பர் 2025, 9:06 AM
சுக்மா வசதிகள் ‘வெள்ளை யானைகள்’ ஆக மாறாது — நிர்வாகக் குழு

Recipients

 ஷா ஆலம், நவம்பர் 15 — 2026 மலேசியா விளையாட்டு விழா (சுக்மா)க்காக மேம்படுத்தப்படும் அனைத்து விளையாட்டு வசதிகளும் எதிர்காலத்தில் நடைபெறும் 2029 இஸ்லாமிய ஒற்றுமை விளையாட்டுகள் (ISG) உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளை ஆதரிக்கச் செய்யப் படுவதாக  மாநில அரசு உறுதி அளித்துள்ளது.

இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில்முனைவோர் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் மொஹ்ட் நஜ்வான் ஹலிமி, தொடர்ச்சியான பராமரிப்பு அவசியம் என்றும், அந்த  வசதிகள் உயர்ந்த தரத்தில் இருந்து பிற சிறப்பான போட்டிகளை நடத்தவும், உள்ளூர் சமூகத்திற்கு நீண்டகால நன்மைகளை வழங்கவும் உதவும் என்றும் கூறினார்.

“விளையாட்டு அடிக்கோட்டமைப்பின் மேம்பாடு சுக்மாவின் தேவைகளுக்கு மட்டு மல்ல, பரந்த சமூகத்திற்கும் பயனளிக்கிறது, மேலும் அடிப்படை விளையாட்டுகளின் வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது,” என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.

நஜ்வான் கூறியதாவது, செக்சன் 13-இல் உள்ள டாருல் எஹ்சான் நீச்சல் மையம் தற்போது மேம்படுத்தப்பட்டு வருகிறது, அது முடிந்ததும் பொதுமக்களுக்கு திறக்கப்படும், மேலும் மாநில விளையாட்டு வீரர்களுக்கான பயிற்சி மையமாகவும் செயல்படும்.

“சுக்மாவுக்காக மேம்படுத்தப் படுகின்ற பிற வசதிகளில் பண்டமாரான் ஹாக்கி மைதானம், பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பல வசதிகள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளால் நிர்வகிக்கப்படும் வசதிகள் அடங்கும்.“ISG 2029க்காக அனைத்து அடிக்கோட்டமைப்புகளும் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்ய சுக்மா 2026க்கு பிறகு மூன்று ஆண்டுகள் எங்களுக்கு உள்ளது.

”முதல்வர் டத்தோ’ ஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்த 2026 சிலாங்கூர் பட்ஜெட்டில் படைப்பாற்றல் பொருளாதார வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட 1 மில்லியன் ரிங்கிட் குறித்து, நஜ்வான் அதை மாநிலத்தின் படைப்பாற்றல் சூழலுக்கான முக்கிய ஊக்கமாக விவரித்தார்.

“இந்த மாதம், நாங்கள் படைப்பாற்றல் பொருளாதார செயல் திட்டத்தை அறிவிப்போம். அதே சமயம், இளைஞர்கள் ஈடுபடும் இந்த துறைக்கான ஊக்கங்கள், நிதி உதவிகள் அல்லது விதை நிதி வழங்குவதற்கும் இந்த ஒதுக்கீடு பயன்படுத்தப்படும்,” என்று அவர் கூறினார்.

நஜ்வான், இந்த செயல் திட்டத்தின் விளைவுகள் நான்கு முதல் ஐந்து ஆண்டுகளில் வெளிப்படும் என்றும், குறிப்பாக சிலாங்கூரில் இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் தெரிவித்தார்.

“நாங்கள் அனைத்து மாவட்டங்களிலும் கவனம் செலுத்துகிறோம், குறிப்பாக கோல சிலாங்கூரில் உள்ள வௌ சாகட் மற்றும் சபாக் பெர்ணமில் செயல்படும் சோங்கோக் மலாயா கைவினைஞர்கள் போன்ற படைப்பாற்றல் திறன் கொண்ட கிராமப்புற பகுதிகளில்.

இது படைப்பாற்றல் பொருளாதாரம் நகர்ப்புறங்களில் மட்டு மல்ல, கிராமப்புற சமூகங்களிலும் வளர்ந்து வருவதை நிரூபிக்கிறது.

”நேற்று, அமிருடின் 3.23 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான மாநில பட்ஜெட்டை, அடுத்த ஆண்டுக்கான செயல்பாட்டு மற்றும் மேம்பாட்டு செலவுகளை உள்ளடங்கிய வரவு செலவினை சமர்ப்பித்தார்.


அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.