ad

KLIA கூரை கசிவுக்கு ஒப்பந்ததாரரின் தவறு  என்று MAHB தெரிவித்துள்ளது

15 நவம்பர் 2025, 7:06 AM
KLIA கூரை கசிவுக்கு ஒப்பந்ததாரரின் தவறு  என்று MAHB தெரிவித்துள்ளது

புத்ராஜெயா, நவம்பர் 15 — நேற்று கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில்  ஏற்பட்ட தண்ணீர் கசிவு சம்பவம், கூரை பழுது பார்ப்பு மற்றும் நீர் தடுப்பு பணி நடத்தும் போது ஒப்பந்ததாரரின் தவறால் ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியா ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்(MAHB) இன்று வெளியிட்ட அறிக்கையில், முதல் கட்ட விசாரணையில், இந்த சம்பவம், முதிர்ந்த கட்டமைப்புகளை சரிசெய்வதற்கான தொடர்ச்சியான பராமரிப்பு பணியின் ஒரு பகுதியாக முக்கிய கூரை சீரமைப்பு பணிகள் நடைபெறும்போது ஏற்பட்டதாகக் கண்டறியப்பட்டது என்று கூறப்பட்டது.

அறிக்கையின் படி, ஒப்பந்ததாரர் கூரையின் மேல் தடங்கல் சேனல்கள் மற்றும் நீர் வெளியேறும் பாதைகளை மூடிக் கொண்டிருந்தார், அதே நேரத்தில் விமான நிலையத்தின் சுற்றுப்புறத்தில் மின்னல் செயல்பாடு தீவிரமானது. பாதுகாப்பு நடைமுறைகளின் படி, அனைத்து பணிகளும் உடனடியாக நிறுத்தப்பட்டு, தொழிலாளர்கள் கூரையின் மேல் பகுதியை விட்டு வெளியே செல்லும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

“கடைசியில், பராமரிப்பு தீவிரமான காலநிலைகளால் விரைவில் பகுதியை காலி செய்யும் போது, ஒப்பந்ததாரர் தற்காலிகமாக தடங்கல் சேனல்களை அகற்ற மறந்ததால் கூரையில்  நீர் வெளியேறும் அமைப்பு தடையாகி விட்டது,” என்று அறிக்கையில் கூறப்பட்டது. இந்த செயல்திறன் குறைபாட்டை சரிசெய்வதற்காக சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு KLIA கடுமையான நடவடிக்கை எடுக்கிறது,” என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும் கூரையில் பணிகள் தொடங்கும் முன் காலநிலை முன்னறிவிப்புகள் கட்டாயம் சரிபார்க்கும் பணிநெறிமுறைகள், மோசமான வானிலை நேரங்களில் உடனடி பணிநிறுத்தம் உறுதிப்படுத்தும் அவசரநிலை நடைமுறைகள் போன்றவை உடனடியாக வலுப்படுத்த ஒப்பந்ததாரருடன் பணியாற்றுவதாகவும். இங்கு நடக்கும் மேம்பாட்டு பணிகள் ஆண்டு முழுமைக்குமானது அது தொடரும் என்றும் கூறியது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.