ஷா ஆலாம், 14 நவம்பர்: மாநில ஆட்சியின் கீழ் உள்ள உயர்கல்விக் கழகங்களில் மேற்கட்டமைப்பு உயர்த்துதல், பழுது பார்த்தல் மற்றும் வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பணிகளுக்காக மொத்தமாக RM10 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த ஒதுக்கீடு சிலாங்கூர் மாநிலப் பல்கலைக்கழகம், சிலாங்கூர் இஸ்லாமியப் பல்கலைக்கழகம், மாநில தொழில்திறன் மேம்பாட்டு மையம் மற்றும் யாயசன் சிலாங்கூரின் மாணவர் விடுதி வசதிகளை உள்ளடக்கியதாகும் என சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் சாரி தெரிவித்தார்.
மேலும் “கல்வி நிறுவனங்களின் வலுப்படுத்தல் என்பது கட்டமைப்பு முன்னேற்றம், கற்பித்தலாளர் மற்றும் நிர்வாகத் திறன் வளர்ச்சி, தொழில் துறையுடன் இணைப்பு, கற்பித்தல்–கற்றல் வசதி மேம்பாடு மற்றும் மாணவர் முன்னேற்றத் திட்டங்களை உள்ளடக்கியதாகும் என நேற்று நடைபெற்ற 2026 சிலாங்கூர் பட்ஜெட் அறிக்கையறையில் தெரிவித்தார்.
கடந்த ஆண்டின் பட்ஜெட்டில், இந்த உயர்கல்விக் கழகங்களுக்காக RM9 மில்லியன் ஒதுக்கப்பட்டிருந்தது. அதில் யாயசன் சிலாங்கூர் மாணவர் விடுதிகள் அமைந்துள்ள கிள்ளான், சபாக் பெர்ணம் பகுதிகளில் உள்ள கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகளும் சேர்க்கப்பட்டிருந்தது.




