ஷா ஆலம், நவ 14: தங்களது வீடுகளைப் பழுது பார்க்க முடியாத குறைந்த வருமானக் கொண்ட குடும்பங்களுக்கு உதவ மாநில அரசு RM3 மில்லியன் ஒதுக்கியுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் வீட்டு பழுதுபார்ப்பு உதவிக்காக அதிகபட்சம் RM35,000 வரை வழங்கப்படும். மேலும், 660 சதுர அடியில் புதிய வீடு கட்டுவதற்கு அதிகபட்சம் RM85,000 வரை உதவி அளிக்கப்படும் என மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் சாரி தெரிவித்தார்.
“இந்த முயற்சி, மக்களின் வாழ்க்கை நலனை உறுதி செய்வதில் மாநில அரசின் தொடர்ச்சியான கவனத்தைக் காட்டுகிறது. இதுவரை ஒன்பது மாவட்டங்களில் 58 குடும்பங்கள் இந்த உதவி மூலம் பயனடைந்துள்ளன.
மேலும், ஓராங் அஸ்லி சமூகத்தைச் சேர்ந்த 14 குடும்பங்களும் உதவி பெற்றுள்ளனர். இது, எந்தக் குழுவும் வளர்ச்சியில் பின்தங்காமல் இருக்க மாநில அரசின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது,” என்று அவர் தெரிவித்தார்.




