ஷா ஆலம், நவ 14: புளுபிரிண்ட் திட்டத்தின் கீழ் சிறு தொழிலாளர்கள் மற்றும் சுயதொழிலில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து உபகரணங்கள் மற்றும் இயந்திர உதவிகளை பெறுவார்கள் என்று மந்திரி புசார் தெரிவித்தார்.
குடும்ப வருமானத்தை மேம்படுத்தும் இந்த திட்டத்திற்காக 2025ஆம் ஆண்டில் RM1.5 மில்லியன் ஒதுக்கப்பட்டது. இது 2026ஆம் ஆண்டில் RM2 மில்லியனாக உயர்த்தப்பட்டுள்ளது என டத்தோ ஶ்ரீ அமிருடின் சாரி தெரிவித்தார்.
உதவி பெறுபவர்களுக்கு தொழில்முனைவோர் பயிற்சி திட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களின் தொழில் திறன்களை மேம்படுத்துவதோடு, விரிவான சந்தை அணுகலைப் பெற வழிகாட்டப்படும்.
“இதன் மூலம், உதவி பெறுபவர்கள் தங்களது தொழிலை விரிவாக்குவதற்கான வாய்ப்பை மட்டுமல்லாமல், தற்போதைய பொருளாதார சூழலில் தங்களது போட்டித் திறனையும் உயர்த்திக்கொள்ள முடியும்,” என்று அவர் கூறினார்.




