ஷா ஆலம், நவ 14: மூத்தக் குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் RM150 ஷோப்பிங் பற்றுச்சீட்டு திட்டத்திற்கு அடுத்த ஆண்டில் RM55 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு வழங்கப்பட்ட RM20 மில்லியனுடன் ஒப்பிடும்போது இத்திட்டத்திற்கான ஒதுக்கீடு பெரிய அளவில் உயர்ந்துள்ளது.
“சிலாங்கூரின் மூத்தக் குடிமக்களின் சேவைக்கு நன்றி கூறும் வகையில், அடிப்படை பொருட்களை வாங்குவதற்கான வவுச்சர் உதவி வழங்கப்படுகிறது,” என்று மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் சாரி கூறினார்.
“2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், இந்தத் திட்டம் சமூகப் பங்கு மற்றும் உள்ளூர் வணிகங்களை ஆதரிக்கும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட சூப்பர் மார்க்கெட்டுகளில் வவுச்சர்கள் வழங்கப்படும்,” என்று அவர் சொன்னார்.
இவ்வாண்டு மாநில அரசு இந்தத் திட்டத்திற்கு RM20 மில்லியன் ஒதுக்கீடு செய்தது. அதில் 20,000 நபர்கள் பயன்பெற்றனர்.




