பெட்டாலிங் ஜெயா, 14 நவம்பர்- இன்று மதியம் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் (KLIA) புயலால் சில பகுதிகளில் தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளது என விமான நிலையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையை கட்டுப்படுத்த விமான நிலையம் குழுக்களை பணியில் ஈடுபடுத்தியுள்ளது.
KLIA அதன் பொறியியல், செயல்பாட்டு மற்றும் பாதுகாப்பு குழுக்களின் மூலம் “பயணிகளின் பாதுகாப்பு, தடுப்புப் பணிகள் மற்றும் மின்சார அமைப்புகளின் பாதுகாப்பை முன்னுரிமையாகக் கையாளுகின்றனர் என்று தெரிவித்தது. மேலும் விமான நிறுவனங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், செயல்பாட்டு பாதிப்புகளை குறைப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியது.
“புயல்கள் மற்றும் கடுமையான வானிலை இன்று மாலை 6 மணி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மேம்பட்ட கண்காணிப்பு நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது,” என்று KLIA அறிவிப்பில் தெரிவித்தது. அவை அவசியமானபோது புதுப்பிப்புகள் வழங்கப்படும்.
முன்பு, X சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட ஒரு காணொளியில், தண்ணீர் இறங்குவதும், பொருட்கள் பதிவு செய்யும் பகுதிக்கு பரவுவதும், பயணிகள் அந்த பகுதியைத் தவிர்ப்பதும் காட்சி காணப்பட்டது.




