ஷா ஆலம், நவ 14: சிலாங்கூர் மாநில அரசு ஊழியர்களின் சேவைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மூன்று மாத சம்பளம் சிறப்பு நிதி உதவியாக (BKK) வழங்கப்படவுள்ளது என்று சிலாங்கூர் மாநில மந்திரி புசார் தெரிவித்தார்.
ஆண்டு ஆரம்பத்தில் 3 மாதச் சம்பளத்தில் ஒன்றரை மாதம் சம்பளம் வழங்கப்படும் நிலையில் மீதமுள்ள ஒன்றரை மாதம் சம்பளம் அல்லது குறைந்தபட்சம் RM1,000 18 டிசம்பரில் வழங்கப்படும் என டத்தோ ஶ்ரீ அமிருடின் சாரி அறிவித்தார்.
கடந்த ஆண்டு, சிலாங்கூரில் இரு மாத சம்பளம் சிறப்பு நிதி உதவியாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.




