ஷா ஆலாம், 14 நவம்பர்: சிலாங்கூர் மாநிலத்தில் 2,00,000 மக்கள் முழுமையான சுகாதார நன்மைகளைப் பெற உள்ளனர். இதில் அடிப்படை சிகிச்சை மற்றும் தடுப்பூசிகள் RM500 வரை, மருத்துவமனை சிகிச்சை RM10,000 வரை, சிறுநீரக சிகிச்சை RM10,000 வரை மற்றும் தீவிர நோய்கள் பாதுகாப்பு RM5,000 வரை உள்ளன.
செப்டம்பர் 2025 வரை 84,346 பேர் ஐ.எஸ்.எஸ். (ISS) திட்டத்தின் பிரதான காப்பீட்டு பங்குதாரராக பதிவு செய்யப்பட்டுள்ளனர். இது 2024ல் இருந்த 67,303 பேரைவிட அதிகம் என மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். மாநில அரசு 2026ஆம் ஆண்டில் சிலாங்கூர் மக்களுக்கு, குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ளவர்கள், தரமான பொது சுகாதார அணுகலை பெற RM40 மில்லியன் ஒதுக்கியுள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.
இதில், மக்கள் நலனில் நேர்மறையான தாக்கத்தை வழங்கும் இல்திசம் சிலாங்கூர் சிஹாட் திட்டத்திற்கு மட்டும் RM20 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இல்திசம் சிலாங்கூர் சிஹாட் திட்டம் 2024ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் முக்கிய குறிக்கோள் சிலாங்கூர் மக்கள், குறிப்பாக பி40 சமூகத்தினருக்கு, சுகாதார சிகிச்சை நன்மைகளை மேலும் விரிவாக்குவதாகும்.




