ad

சிலாங்கூரின் நீர் விநியோகத்தைப் பாதுகாக்கும் திட்டம் - மந்திரி புசார்

14 நவம்பர் 2025, 11:39 AM
சிலாங்கூரின் நீர் விநியோகத்தைப் பாதுகாக்கும் திட்டம் - மந்திரி புசார்

ஷா ஆலாம், நவம்பர் 14 — சிலாங்கூர் 2026 பட்ஜெட்டின் கீழ் மாநில அரசு RM110.1 மில்லியன் ஒதுக்கி உள்ளது. Water Grid Interconnectivity திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் 2030க்குள் நிலைத்தன்மையான மற்றும் தடை இல்லாத நீர்விநியோகத்தை உறுதிசெய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.

Pengurusan Air Selangor Sdn Bhd இந்த நிதியை பயன்படுத்தி பெட்டாலிங், கோம்பாக், கோலாலம்பூர், உலு சிலாங்கூர், கிள்ளான், உலு லங்காட், சிப்பாங் மற்றும் கோலா சிலாங்கூர் மாவட்டங்களில் புதிய நீர்க்குழாய் அமைப்பு, மேம்பாட்டுப் பணிகள் மற்றும் ஆலோசனைச் சேவைகளை மேற்கொள்ளப்படும் என மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

சிலாங்கூர் மக்களுக்கு போதுமான, உயர்தரமான மற்றும் நம்பகமான நீர்விநியோகம் கிடைக்க உயர்தரத் திட்டங்களை அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. ஆயர் சிலாங்கூர் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டங்கள் அதன் தெளிவான உதாரணம்,” என்று அவர் மாநில சட்டமன்றத்தில் பட்ஜெட்டை அட்டவணைப்படுத்தும் போது கூறினார்.

சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டை உள்ளடக்கிய ஆறாவது தூணின் கீழ், Air Darul Ehsan (SADE) இலவச நீர்திட்டத்திற்கான குடும்ப வருமான தகுதி வரம்பு RM5,000-லிருந்து RM6,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த திட்டத்திற்காக 2026ஆம் ஆண்டில் RM20 மில்லியன் ஒதுக்கப்படும், மேலும் வருடாந்திர RM52.7 மில்லியன் செலவினத்தை ஆயர் சிலாங்கூர் ஏற்றுக்கொள்கிறது.

அத்துடன், தினசரி 700 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட Rasau நீர்தூய்மைப்படுத்தும் நிலையம் (Fasa 2) 2026 முதல் 2028 வரை கட்டுமானத்தில் செல்லும் என்று அவர் அறிவித்தார். RM2.6 பில்லியன் செலவில் ஆயர் சிலாங்கூர் முழுமையாக நிதியளிக்கும் இந்த திட்டம், 2031க்குள் பெட்டாலிங் மற்றும் கோலா லங்காட் பகுதிகளில் உள்ள 467,000 நீர்க்கணக்கீட்டு பயனாளர்களுக்கு நீர்விநியோகம் செய்யும் திறன் பெறும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.