ஷா ஆலம், நவ 14: எதிர்வரும் ஆண்டில் பெண்களுக்கான வேலை வாய்ப்பு சந்தை நடத்தப்படும். இது மூலம் பெண்களுக்கு அதிகமான வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்று மந்திரி புசார் கூறினார்.
மாநில அரசு பெர்கெசோ உடன் இணைந்து, தொழில்முறை மற்றும் தொழில்நுட்ப வேலை வாய்ப்புகளை வழங்கும் சந்தையை நடத்தவுள்ளதாக டத்தோ ஶ்ரீ அமிருடின் சாரி கூறினார்.
“பெண்களுக்கான வேலைவாய்ப்பு முயற்சி ``Career Comeback`` திட்டத்தின் மூலம் TalentCorp ஒத்துழைப்புடன் கோம்பாக், கிள்ளான், சபாக் பெர்ணம், பெட்டாலிங் மற்றும் உலு லங்காட் ஆகிய 5 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது.
இவ்வாண்டு முழுவதும் இதில் 1,000 பெண்கள் கலந்து கொண்டனர். அடுத்த ஆண்டு, இந்த முயற்சியை பெண்களுக்கான வேலை வாய்ப்பு சந்தை மூலம் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, மாநில அரசு RM500,000 ஒதுக்கியுள்ளது,” என அவர் கூறினார்.
2030-ஆம் ஆண்டுக்குள் பெண்கள் பணியாற்றும் விகிதத்தை 75% ஆக உயர்த்த சிலாங்கூர் திட்டமிட்டுள்ளதாகவும், 2025-ஆம் ஆண்டில் அது 69.9% ஆக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். இதனை முன்னெடுத்தும் Career Comeback Programme TalentCorp உடன் இணைந்து நடத்தப்பட்டது.
மேலும், சில மாநில அரசுடன் தொடர்புடைய நிறுவனங்களில், MBI Corporation போன்ற இடங்களில், நெகிழ்வான வேலை கொள்கை (Flexible Work Policy) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதையும் அவர் கூறினார்.




