ஷா ஆலம், நவ 14: பந்துவான் சிஹாட் சிலாங்கூர் திட்டத்தை தொடர மாநில அரசு RM5 மில்லியனை ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் பொதுமக்களுக்கு தேவையான சிகிச்சை மற்றும் மருத்துவப் பொருட்கள் கிடைக்க உதவி வழங்கப்படும்.
இத்திட்டத்தின் நன்மைகளில் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்களுக்கு RM5,000, பொய் கால்கள் பொருத்துவதற்கு RM5,000, லென்ஸ் வாங்குதல் மற்றும் கண் அறுவை சிகிச்சைக்கு RM1,200 வரை வழங்கப்படும் என மந்திரி புசார் கூறினார்.
“இத்திட்டம் 2009-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, பொதுமக்களுக்கு விரிவான சிகிச்சை அணுகலை உறுதிசெய்வதற்காக தொடர்ந்து மேம்படுத்தப்படுகின்றது,” என்று மந்திரி புசார் அமிருடின் ஷாரி இன்று சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் (DNS) 2026-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முன்வைத்தபோது கூறினார்.
மேலும், பிகேஎன்எஸ் இதேபோல் இதய சிகிச்சை திட்டத்திற்கான நிதியளிப்பையும் தொடர்கிறது. இதன் மூலம் 2024 ஆம் ஆண்டில் 78 பேர் பயன்பெற்ற நிலையில் இவ்வாண்டு செப்டம்பர் 30 வரை 191 பேர் பயன் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




