ஷா ஆலாம், நவ 14- சிலாங்கூர் மாநிலத்தில் இந்தியர்களுக்காக மேற்கொள்ளப்படும் திட்டமான இந்தியர் தொழில்முனைவோர் மற்றும் மேம்பாடு எனப்படும் ஐ-சீட் திட்டம் அடுத்தாண்டும் தொடரப்படும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த திட்டத்தின் மூலம் இந்திய தொழில் முனைவோர்களுக்கு வியாபாரத்திற்கு தேவைப்படும் பொருட்களை வாங்கி கொடுக்கும் முன்னெடுப்பை மாநில அரசாங்கம் கொண்டுள்ளது.
இந்த திட்டத்திற்காக மாநில அரசாங்கம் 1 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளது என்று சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் அவர் தெரிவித்தார்.
இந்திய தொழில் முனைவர்களை மேம்படுத்த ஐ-சீட் திட்டம் அடுத்தாண்டும் தொடரப்படும்- மந்திரி புசார்
14 நவம்பர் 2025, 10:14 AM




