ஷா ஆலாம், நவ 14- சிலாங்கூர் மாநிலம் முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் (PBT) சீர்திருத்தங்கள் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முதல் அமல் படுத்தப் படவுள்ளன.
இதில், பிரதானமாக இரண்டு முக்கிய சேவைகளில் கவனம் செலுத்தப்படும்: அதாவது வீட்டு மறுசீரமைப்பு அனுமதி (Permit Ubah Suai Kediaman) மற்றும் சிறு வியாபாரிகள் உரிமம் (Lesen Penjaja).
இந்த நடவடிக்கை அனுமதி ஒப்புதல் காலத்தையும் உரிமச் செயலாக்க காலத்தையும் துரிதப்படுத்தும், இதன் மூலம் மக்களின் செயல்பாடுகளை எளிதாக்கும் என்று தெரிவித்தார்.
சீரான விண்ணப்ப செயல்முறை மூலம், அபாயம் குறைந்த மறுசீரமைப்பு மற்றும் தற்காலிக வணிக உரிமங்களுக்கான ஒப்புதல் காலத்தை மாநில அரசு குறைக்கும்.
குறிப்பாக, வீட்டின் முக்கிய அமைப்பை பாதிக்காத வரிசை தொடர் வகை வீடுகளுக்கான மறுசீரமைப்பு அனுமதி, 24 மணி நேரத்திற்கும் குறைவாக ஒப்புதல் அளிக்கப்படும். சிறு வியாபாரிகளின் உரிமம் செயலாக்க காலம், தற்போதுள்ள 30 நாட்களில் இருந்து 14 வேலை நாட்களாக குறைக்கப்படும்.
இந்த நிர்வாக மாற்றம் வெறும் கோஷமல்ல, மாறாக சிலாங்கூர் மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும், விரைவுபடுத்தும் மற்றும் மேம்படுத்தும் ஒரு திடமான நடவடிக்கை என்று அவர் கூறினார்.
மேலும், மாநிலம் முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மதிப்பீட்டு வரி நிலுவைத் தொகை சரிபார்ப்பு மற்றும் பொருத்தம் அமைப்பை (i-GATE PBT) சிலாங்கூர் உருவாகவுள்ளது.
இந்த முயற்சி, மாநிலத்தின் வருவாய் வசூலின் திறனை மேம் படுத்துவதையும், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் உள்ளாட்சி அமைப்புகளின் விதிமுறைகளுக்கு இணங்குவதைப் பலப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது அனைத்து உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஏற்கனவே உள்ள அமைப்புகளை ஒருங்கிணைத்து, தானியங்கி தரவு ஒருங்கிணைப்பு மற்றும் பயனர் நட்பு டிஜிட்டல் தளத்தை உறுதி செய்யும்.
அத்துடன், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் நிதி மேலாண்மை திறனை அதிகரிக்க, தேசிய கணக்காளர் துறை நிர்ணயித்த அரசு நிறுவன கணக்கியல் அமைப்பு (SAGA) இணக்கத் தரத்தை அமல்படுத்துவதன் மூலம் நிதி மேலாண்மை திறன் மேம்படுத்தப்படும்.
தற்போது கோல லங்காட், சிப்பாங், செலாயாங் மற்றும் கோல சிலாங்கூர் ஆகிய நான்கு உள்ளாட்சி அமைப்புகள் SAGA இணக்க அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன; மீதமுள்ள எட்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கான அமலாக்கம் மாநில SAGA கண்காணிப்புக் குழு மூலம் ஒருங்கிணைக்கப்படும்.
சிலாங்கூர் மாநிலம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் சீர்திருத்தங்கள்; அடுத்தாண்டு முழுவதும் மேற்கொள்ளப்படவுள்ளன
14 நவம்பர் 2025, 10:09 AM




