ஷா ஆலாம், நவ 14- திறமையான மற்றும் போட்டித் தன்மை கொண்ட சுகாதார முன்வரிசை ஊழியர்களை உருவாக்குவதற்காக, சிலாங்கூர் முன்வரிசை பயிற்சியாளர் திட்டம் (Selangor Frontliner Apprenticeship - SELFA) என்ற புதிய திட்டத்தை மாநில அரசாங்கம் RM4.74 மில்லியன் ஒதுக்கீட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது என்று மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்தார்.
இந்தத் திட்டம், சுகாதாரத் துறையில் உள்ள முக்கியமான படிப்புகளைப் பயில மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கிறது.இதில், சிலாங்கூர் பல்கலைக்கழகத்தில் (Unisel) மூன்று ஆண்டு காலப் படிப்புகளான டிப்ளோமா செவிலியம் (Nursing), பிசியோதெரபி (Physiotherapy), மருத்துவ படிமம் (Medical Imaging) மற்றும் மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம் (Medical Laboratory Technology) ஆகியவை அடங்கும்.
மேலும், இந்தத் திட்டத்தின் மூலம் பட்டம் பெறும் மாணவர்களுக்கு செல் கேட் மருத்துவமனை (Selgate Hospital) வலையமைப்பில் ஐந்து ஆண்டுகளுக்குப் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும்.
இதற்கிடையில், சிலாங்கூர் தொழில்நுட்பத் திறன் மேம்பாட்டு மையம் (Selangor Technical Skills Development Centre - STDC), வாகனத் துறை நிறுவனங்களுடன் இணைந்து சர்வதேச தரத்திலான வாகனத் துறை கல்வி வசதிகளை உருவாக்க உள்ளது என்று அமிருடின் ஷாரி கூறினார்.
சிலாங்கூர் சுகாதார முன்வரிசை ஊழியர்களுக்காக SELFA பயிற்சித் திட்டம்: RM4.74 மில்லியன் ஒதுக்கீடு
14 நவம்பர் 2025, 10:05 AM





