ஷா ஆலம், நவ 14: எதிர்வரும் ஆண்டில் டியூசன் ரக்யாட் சிலாங்கூர் (PTRS) திட்டத்தின் பாடத்திட்டத்தில் இரண்டு புதிய பாடங்கள் அதாவது இயற்பியல் மற்றும் வேதியியல், அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை அறிவியல் துறையில் மாணவர்களின் தேர்ச்சி அதிகரிப்பதற்கும், விரிவான பாடத்திட்ட வளர்ச்சியை ஆதரிப்பதற்கும் மேற்கொள்ளப்பட்டது என அவர் கூறினார்.
e-புத்தகங்கள், கற்றல் மற்றும் போதனை (PdP) வீடியோக்கள் மற்றும் இறுதி வேக வீடியோக்கள் போன்ற டிஜிட்டல் கற்றல் தளத்தை ePTRS வழங்குகிறது. மேலும் இது தொடர்ந்து மேம்படுத்தப்படும்.
“இது தொடர்பான பயிற்சி தொகுப்பு மற்றும் செயல்திறன் அறிக்கைகள், மீள்பார்வை பயன்பாட்டின் மூலம் கண்காணிக்கப்படும்.
“இந்த மேம்பாடுகள் கற்றல் திறனையும், திட்டத்தின் செயல்பாடையும் உயர்த்துவதற்கு முக்கியமானவை. 2026ஆம் ஆண்டிற்கான இத்திட்டத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய மாநில அரசு RM3 மில்லியன் ஒதுக்கியுள்ளது,” என்று அமிருடின் இன்று சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் (DNS) பட்ஜெட்டை முன்வைத்தபோது கூறினார்.
மாநில கல்வி மற்றும் மனித மூலதனம் நிர்வாக குழு மூலம் எம்பிஐ மற்றும் வழிநடத்திய இத்திட்டத்தின் செயல்திறன் எஸ்.பி.எம் 2024 தேர்வு முடிவுகளால் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது என அவர் விளக்கினார்.
“அனைத்து பாடங்களின் மதிப்பெண் (GPN) 2023-ஆம் ஆண்டின் 4.67-இல் இருந்து நிலையில் 2024-ஆம் ஆண்டில் 4.59 ஆக உயர்ந்தது. மேலும் சான்றிதழ் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 2023ஆம் ஆண்டில் 58,082 இருந்தது. அந்த எண்ணிக்கை 2024ஆம் ஆண்டில் 59,403ஆக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த சாதனையை தொடர்ந்து வலுப்படுத்துவதற்காக, மாநில அரசு இத்திட்டத்தை 70,000 ஐந்தாம் படிவ மாணவர்களுக்கும், 75,000 நான்காம் படிவ மாணவர்களுக்கு விரிவுபடுத்துகிறது, இது 272 பள்ளிகளை உள்ளடக்கியது.
PTRS என்பது மலாய் மொழி, ஆங்கிலம், கணிதம், அறிவியல், வரலாறு மற்றும் கூடுதல் கணிதம் போன்ற பாடங்களுக்கான இலவச வகுப்பு திட்டம் ஆகும்.
2025ஆம் ஆண்டின் சிலாங்கூர் பட்ஜெட்டில், இடைநிலைப்பள்ளிகளுக்கு PTRSக்காக RM10 மில்லியன் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு RM1 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 160,000 மாணவர்கள் பயன் பெற்றனர்.
மேலும், 2026-ஆம் ஆண்டில், மாணவர்களின் (Financial Literacy) திட்டத்திற்கும் மாநில அரசு RM500,000 ஒதுக்கீடு செய்துள்ளது. இது 100 பள்ளிகளை உள்ளடக்கியது.
இந்த திட்டம் கல்வி அமைச்சின் அங்கீகாரம் பெற்ற ``EastSpring Investments Berhad`` உடன் இணைந்து செயல்படுத்தப்படும்.
“இது நமது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக, அதாவது அவர்கள் ஆரம்ப கட்டத்திலிருந்தே நிதி திட்டமிடலில் திறமையாக இருப்பதை உறுதி செய்ய மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.




