ad

சிரண்டா, லெம்பா பெரிங்கின் - சிலாங்கூரின் “ஆட்டோமொட்டிவ் வெளி”ஆக உருவாக்கப்படும்

14 நவம்பர் 2025, 9:14 AM
சிரண்டா, லெம்பா பெரிங்கின் - சிலாங்கூரின் “ஆட்டோமொட்டிவ் வெளி”ஆக உருவாக்கப்படும்

ஷா ஆலம், நவ 14: சிரண்டா மற்றும் லெம்பா பெரிங்கின் பகுதிகள் “ஆட்டோமொட்டிவ் வெளி”ஆக உருவாக்கப்படும். இதில் பெட்ரோல், டீசல், ஹைப்ரிட் மற்றும் மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும்.

இந்த பகுதிகள் ஆண்டுக்கு 3,00,000 வாகனங்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவையாகும். இதற்காக சேரி நிறுவனம், 2.2 பில்லியன் ரிங்கிட் முதலீட்டுடன் “Chery Smart Auto Industrial Park”யை கட்டும் என சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்

இந்த பகுதி நாட்டின் முக்கிய வாகன நிறுவனங்கள் புரோட்டோன், பெரோடுவா மற்றும் நிசான் நிறுவனங்களுக்கு அருகே அமைந்துள்ளது. முழுமையான விநியோகத்தை மேம்படுத்த “Invest Selangor” நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

மேலும், சிலாங்கூர் ரயில்வே தொழிற்சாலைகள் உலு சிலாங்கூரில் கட்டப்படவிருக்கிறது. இதில் தொழில்துறை, கல்வி நிறுவல்கள் மற்றும் ரயில்வே நிறுவனங்கள் ஆகியவை ஈடுபடும்.

இதுவரை, சிலாங்கூரில் உள்ள சில நிறுவனங்கள் MRT வலையமைப்புக்காகவும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்காகவும் லோக்கமோட்டிவ் உற்பத்தியைத் தொடங்கியுள்ளன. உதாரணத்திற்கு SMH Rail அதில் அடங்கும்.

“இந்த நிறுவனம் யூரோப்பிற்கு வெளியே சிமென்ஸ் அங்கீகாரம் மற்றும் சான்றிதழ் பெற்ற ஒரே லோக்கமோட்டிவ் உற்பத்தி தொழிற்சாலை ஆகும்,`` என அவர் கூறினார்.

2024 சிலாங்கூர் பட்ஜெட்டில், மாநில அரசு மேற்கு பகுதியில் “Jajaran Rel Kita Selangor” திட்டத்தின் நடைமுறையை ஆய்வு செய்ய RM3 மில்லியன் ஒதுக்கீட்டை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.