ஷாஆலம், நவம்பர் 14 - சிலாங்கூர், புக்கிட் திங்கியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் வேலையில்லாத ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து, துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 3 சந்தேக நபர்களை போலிசார் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக 19 முதல் 35 வயதுக்குட்பட்ட அனைத்து சந்தேக நபர்களும் கிள்ளானைச் சுற்றி கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் போலிஸ் தலைவர் டத்தோ ஷசாலி கஹார் இதனை தெரிவித்தார். விசாரணைக்கு உதவுவதற்காக இதுவரை மூன்று பேரை போலிசார் கைது செய்துள்ளனர்.
மேலும் மூவரும் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த தடுப்பு காவல் வரும் திங்கட்கிழமை முடிவடைகிறது என்றார் அவர். இன்று சிலாங்கூர் போலிஸ் தலைமையகத்தில் போதைப்பொருள் குற்றவியல் புலனாய்வுத் துறையின் போதைப்பொருள் வழக்குப் பொருட்கள், விசாரணை ஆவணங்களை அப்புறப்படுத்திய பின்னர் அவர் இவ்வாறு கூறினார்.




