ஷா ஆலாம், நவ 14- அடுத்தாண்டு சிலாங்கூர் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதம் தேசிய சராசரியை விட அதிகம், குறிப்பாக 5.0 முதல் 5.5 சதவிகிதம் வரையிலான மிதமான விகித்தத்தில் நீடித்திருக்கும் என்று மாநில மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இன்று 2026 ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது,ள் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
பன்முகப்படுத்தப்பட்ட தொழில்துறை கட்டமைப்பு, தொழில் நுட்ப-தீவிர துறைகள், உள்நாட்டு நிறுவனங்களின் வலிமை மற்றும் சர்வதேச தரத்திலான தளவாட வலையமைப்பு (International Logistics Network) ஆகியவை இந்த வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று அவர் கூறினார்.
வெளிப்புற காரணிகள் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மையைத் தக்க வைத்திருந்தாலும், வலுவான உள்நாட்டுத் தேவை, கட்டுப்படுத்தப்பட்ட பணவீக்க விகிதம் மற்றும் நிலையான தொழிலாளர் சந்தை ஆகியவை வளர்ச்சிக்கு முக்கிய தூண்களாகத் தொடர்ந்து விளங்கும்.
மாநிலத்தின் நிதி சமநிலை (Fiscal Balance) நிலைத் தன்மையாக உள்ளது, இது நீடித்த வருவாய் மற்றும் நிலைத்தன்மை (ESG) கொள்கையின் அடிப் படையிலான விவேகமான நிர்வாகத்தால் ஆதரிக்கப்படுகிறது என்றும் மந்திரி புசார் மேலும் தெரிவித்தார்.
சிலாங்கூர் பட்ஜெட் 2026: மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 5.0 முதல் 5.5 சதவிகிதம் இருக்கும்- அமிருடின் ஷாரி நம்பிக்கை
14 நவம்பர் 2025, 8:35 AM




