ad

சிலாங்கூர் பட்ஜெட் 2026: RM 3.23 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு - டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி அறிவிப்பு

14 நவம்பர் 2025, 8:10 AM
சிலாங்கூர் பட்ஜெட் 2026: RM 3.23 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு - டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி அறிவிப்பு

ஷா ஆலாம், நவ 14- 2026 ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் மாநில பட்ஜெட்டில் மாநில அரசு RM 3.23 பில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளதாக சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி சட்டமன்றத்தில் கூறினார்.

அடுத்தாண்டுக்கான நிர்வாக செலவீனம், மாநில மேம்பாட்டு திட்டங்களுக்காக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமிருடின் விவரித்தார்.

ஒதுக்கப்பட்ட மொத்தத் தொகையில்,
RM1.86 பில்லியன் (57.6%) நிர்வாகச் செலவினங்களுக்காக வும், RM1.37 பில்லியன் (42.4%) மேம்பாட்டுச் செலவினங்களுக்காகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

சவாலான பொருளாதாரச் சூழலை எதிர்கொள்ளும் நிலையில், மாநில அரசாங்கம் தனது நிதி நிலை ஸ்திரத்தன்மையை தொடர்ந்து பராமரித்து வருவதாகவும், 2026 ஆம் ஆண்டு பொருளாதார மந்த நிலையை சமாளிக்க முழுமையான குறிகாட்டிகள் மற்றும் மதிப்பீடுகளுடன் தயாராக இருப்பதாகவும் மந்திரி புசார் குறிப்பிட்டார்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.