புதுடெல்லி, நவ 14 - புதுடெல்லியில் காற்றின் தரக் குறியீடு 423ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அந்நகரில் வசிக்கும் மக்களுக்கு ஆபத்தை கொண்டு வரும் என்று அதிகாரிகள் எச்சரித்திருக்கின்றனர்.
கடந்த பல நாள்களாகப் புதுடெல்லியில் ஏற்பட்டுள்ள மோசமான காற்றுத் தூய்மைக்கேட்டினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், சுவாசக் கோளாறினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையைக் கையாள்வதற்காக அத்தியாவசியமற்ற கட்டுமானப் பணிகளுக்கு டெல்லி அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-- பெர்னாமா




