ad

குழந்தைகளில் நீரிழிவு நோய் அதிகரிப்பு

14 நவம்பர் 2025, 5:34 AM
குழந்தைகளில் நீரிழிவு நோய் அதிகரிப்பு

ஷா ஆலம், நவம்பர் 14 — குழந்தைகளில் அதிகரித்து வரும் நீரிழிவு நோய், அதிகப்படியான சர்க்கரை மற்றும் கலோரி உட்கொள்வதுடன் நேரடியாக தொடர்புடையது என்று உணவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.

மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் ஹமீத் ஜான் ஜான் முகமது கூறியதாவது, சீரான உணவுப் பழக்கம் வீட்டிலிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளின் உணவுப் பழக்கத்தை உருவாக்குவதில் முக்கியமானவர்கள்.

“வாய்ப்பிருந்தால் நாமும், குழந்தைகளும் இனிப்பில்லாத உணவுக்கும் பானத்துக்கும் பழக வேண்டும். இனிப்பு வேண்டும் என்றால், அதற்கு பழச்சாறு போன்ற ஆரோக்கியமானதை கொடுக்கலாம்,” என்று அவர்மீடியா சிலாங்கூருரிடம் தெரிவித்தார். ஆரம்ப நிலையிலேயே உணவு கட்டுப்பாடு செய்வதால், நீரிழிவு நோயின் தீவிர விளைவுகள் குறிப்பாக கால்கட்டை அகற்றுவது, பார்வை பிரச்சினைகள் போன்றவற்றைத் தவிர்க்க முடியும் என்று அவர் கூறினார்.

World Bank தரவுகளின்படி, மலேசியா தற்போது நீரிழிவு நோயால் உலகில் 13வது இடத்தில் உள்ளது, 2021-ல் இருந்த 16வது இடத்திலிருந்து உயர்ந்து. இதில் குழந்தைகள் மற்றும் அதிக உடல் எடையுடன் இருக்கும் இளைஞர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு, நிபுணர்கள் இந்த நிலையை நாட்டின் முக்கிய சுகாதார நெருக்கடி எனக் கருதி உடனடி கவனம் தேவையென வலியுறுத்தினர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.