ஜொகூர் பாரு, நவ 14- கடப்பிதழ் இல்லாமல் மலேசியாவை விட்டு வெளியேற முயற்சித்த 26 மோட்டார் சைக்கிளோட்டிகள் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் முறையே எல்லை பாதுகாப்பு, மற்றும் பாதுகாப்பு (AKPS) அமலாக்க தரப்பினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
1960ஆம் ஆண்டு கடப்பிதழ் சட்டத்தின் செக்ஷன் 2(2)இன் கீழ் அனைத்து உள்ளூர் நாட்டவர்களும் குற்றம் புரிந்த நிலையில் அவர்கள் அனைவரும் பொந்தியானில் உள்ள நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
நீதிமன்றத்தால் அவர்களுக்கு முறையே 1,500 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. BSI வளாகங்களில் மோட்டார் சைக்கிளோட்டிகள் என்றும் சாலை, எல்லை பாதுகாப்பு விவகாரங்கள் பின்பற்ற வேண்டும் என்று AKPS கேட்டுக்கொண்டது




