கோத்தா கினாபாலு, நவ 14- 17ஆவது சபா மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நாளை, சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
சபா மாநிலத்தின் அனைத்து 73 சட்டமன்ற தொகுதிக்கும் ஒருசேர இந்த வேட்புமனுத்தாக்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
காலை மணி 9 முதல் 10 மணி வரை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுவை மாநில தேர்தல் அலுவலகத்தில் ஒப்படைக்கலாம்.
விண்ணப்பம் சரிபார்த்த பிறகு தேர்தல் அதிகாரிகளால் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும் என்று மலேசியத் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டது.
வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்த பிறகு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இரு வாரங்களுக்கு தங்களின் தேர்தல் பரப்புரைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள் .





