கோத்தா கினாபாலு, நவ 14- சபா மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இதுவரை 3,334 வேட்புமனு பாரங்கள் விற்கப்பட்டுள்ளதாக மலேசியத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
மொத்த பாரங்களில் 2,414 பாரங்கள் யாவும் மாநில தேர்தல் அலுவலகத்தில் இருந்து விற்கப்பட்ட நிலையில் எஞ்சிய 920 பாரங்கள் நிர்வாக அதிகாரி அலுவலகம் மூலம் விற்கப்பட்டதாக எஸ்.பி.ஆர். குறிப்பிட்டது.
நாளை சனிக்கிழமை 17ஆவது சபா மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தயார்நிலையில் இருக்கின்றன.
17ஆவது சபா மாநில சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் நவம்பர் 29ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த முறை 17 லட்சத்து 84 ஆயிரத்து 843 பேர் தங்களின் ஜனநாயக கடமையை மேற்கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.
தேசிய முன்னணி 45 இடங்களிலும் சபா ஜி.ஆர்.எஸ் கட்சி 55 சட்டமன்ற இடங்களிலும் வாரிசான் கட்சி அனைத்து 73 இடங்களிலும் பிகேஆர் கட்சி 10 இடங்களிலும் போட்டியிடவுள்ளனர்.




