புத்ராஜெயா, நவம்பர் 14 — புத்ராஜெயா கார்ப்பரேஷன் (PPj) தலைவர் டத்தோ ஃபாட்லுன் மக் உஜுத், நாளை முதல் கோலாலம்பூர் மேயராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று பிரதமர் துறையின் அமைச்சர் டாக்டர் ஜலிஹா முஸ்தபா இன்று தெரிவித்தார்.
2022 முதல் PPj தலைவராக பணியாற்றும் ஃபாட்லுன், Putrajaya Smart City Blueprint 2025, Putrajaya Green Transformation Plan உள்ளிட்ட பல முயற்சிகளின் செயல்பாட்டை வலுப்படுத்துவதில் சிறப்பான தலைமைத்துவத்தை காட்டியுள்ளார். மேலும் பல சர்வதேச மாநாடுகள் மற்றும் தொழில்முறை வலையமைப்புகளில் அவரின் செயல்பாடுகள், முன்னோக்கிய சிந்தனையுடைய நகர திட்டமிடுபவராக அவரது தரத்தை உயர்த்துகிறது.
“இந்த நியமனம் மூலம், ஃபாட்லுன் கோலாலம்பூர் மாநகர மன்றத்தில் நேர்மை, திறன் மற்றும் மக்களின் ஆசைகளுக்கு உகந்த வகையில் தொடர்ந்து சேவை வழங்குவார் என நம்புகிறேன் என்று அவர் கூறினார். மேலும் அவரின் வழிநடத்தல் வழி CHASE City திட்டத்தை வலுப்படுத்தி, மதனி மதிப்புகள் அடிப்படையாகக் கொண்ட போட்டித்திறனான, வாழத் தகுந்த தலைநகராக கோலாலம்பூரை மேம்படுத்தும்,” என அவர் கூறினார்.
கோலாலம்பூர் மேயராக பணிபுரிந்த காலத்தில் நகரத்தின் சர்வதேச மரியாதையை உயர்த்திய மைமுனா அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.




