ஷா ஆலம், நவ 14: இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் சிலாங்கூர் பட்ஜெட் 2026இன் தாக்கல் நிகழ்ச்சியைப் பின்தொடர பொதுமக்கள் அழைக்கப்படுகின்றனர்.
‘Selangor Juara, Rakyat Sejahtera’ என்ற தலைப்பில் நடைபெறும் இந்த தாக்கல் அமிருடின் ஷாரியின் சமூக ஊடக தளங்களிலும், மீடியா சிலாங்கூர் இணையதளத்திலும் ஒளிபரப்பாகும்.
மேலும், மீடியா சிலாங்கூரின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக தளங்களான முகநூல், இண்ஸ்டாகிராம், X, டிக் டோக், டிலிகிராம் மற்றும் மை டிவி சேனலிலும் இந்த நிகழ்வை காணலாம்.
மாநிலத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் மக்கள் பெறவிருக்கும் நன்மைகள் பற்றிய முழுமையான தகவல்களை அறிய, அனைத்து சிலாங்கூர் மக்களும் இந்த பட்ஜெட் தாக்கலை இணையம் மூலம் காண அழைக்கப்படுகின்றனர்.




