ஷா ஆலாம், நவம்பர் 13: ஜோகூர், கூலாய், ஜாலான் சீலோங் செனாய் பகுதியில் உள்ள குப்பை தொழிற்சாலை இன்று அதிகாலை தீப்பற்றி எரிந்ததில்,ஆடவர் கருகி உயிரிழந்தார்.
கூலாய் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய (BBP Kulai) செயல்பாட்டு கமாண்டர் முகமட் அஸ்ரி யூஸ்ரி தெரிவித்ததாவது, உயிரிழந்தவர் 35 வயதான ஒரு உள்ளூர் ஆணாகும்.“தீ விபத்து குறித்து காலை 3.40 மணிக்கு தகவல் கிடைத்ததையடுத்து, ஒன்பது உறுப்பினர்கள் மற்றும் மூன்று வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அங்கு சென்றபோது, 60x80 மீட்டர் பரப்பளவுள்ள தொழிற்சாலை , சுமார் 20 சதவீதம் அளவுக்கு தீயில் எரிந்து சேதமடைந்தது. “அப்போது, ஆடவர் தொழிற்சாலைக்குள் சிக்கியிருந்தது மற்றும், அவரை தீயணைப்புப் படையினர் கருகிய நிலையில் கண்டுபிடித்தனர். தீயணைப்பு பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டு, தீ முழுமையாக அணைக்கப்பட்டது,” என அவர் கூறினார். உயிரிழந்தவரின் உடல் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு, மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாக அவர் கூரினார்.




