ஷா ஆலம், நவம்பர் 13: நாளை நடைபெறவுள்ள சிலாங்கூர் 2026 பட்ஜெட் தாக்கல் மக்கள் அனைவரும் பின்பற்றுமாறு அழைப்பு விடுத்துள்ளார் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி.
‘Selangor Juara, Rakyat Sejahtera’ என்ற தலைப்பில் நடைபெறும் இந்த பட்ஜெட் தாக்கல் மாலை 3 மணிக்கு தொடங்கும். பொது ம்ககள் இந்த தாக்கலை மாநில மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரியின் சமூக ஊடகப் பக்கங்களிலும், மீடியா சிலாங்கூர் இணையதளத்திலும் நேரலை வழியாகக் காணலாம்.
அதுமட்டுமன்றி, மீடியா சிலாங்கூரின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக தளங்கள் மூலமும் நேரலை வழியும் காண முடியும்..
அடுத்த ஆண்டுக்கான இந்த பட்ஜெட் பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் நலன் ஆகியவற்றை சமநிலைப்படுத்தும் முழுமையான அணுகுமுறையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இது அரசு பணியாளர்கள் மற்றும் சிலாங்கூர் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை தரும் எனவும் அவர் கூறினார்.
அத்துடன், இந்த முறை பட்ஜெட் கல்வி மற்றும் வறுமை ஒழிப்பு சார்ந்த புதிய திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவுள்ளது. இது மாநிலத்தின் முன்னேற்றத்துடன் மக்களும் இணைந்து வளர்வதை உறுதிப்படுத்தும் என அவர் விளக்கினார்.
மேலும், இந்த பட்ஜெட் வெள்ளப் பிரச்சனையை சமாளிக்க மேற்கொள்ளப்படும் மேம்பாட்டு திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும். இது, பிரதமர் டத்தோ’ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்த தேசிய 2026 பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்ட RM2.2 பில்லியன் ஒதுக்கீடு உடன் இணங்குகிறது.




