கோலாலம்பூர், நவ 13- எதிர்வரும் டிசம்பர் 2ஆம் தேதியோடு அனைத்துலக வாணிப, தொழிற்துறை அமைச்சர் தெங்கு ஸஃப்ருலின் பதவிக்காலம் நிறைவடைகிறது.
இந்த தகவலை அவர் அனைத்துலக வாணிப, தொழிற்துறை ஊழியர்களுடனான சந்திப்பின் போது தெரிவித்தார்.
நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக மீண்டும் நியமிக்கப்படவில்லை என்றால் தம்மால் அமைச்சர் பொறுப்பினை ஏற்க முடியாது என்று அவர் சொன்னார்.
தாம் அமைச்சராக நீடிப்பதா இல்லையா என்பது குறித்து பிரதமர் அன்வாரின் முடிவே இறுதியானதாகும் என்று தெங்கு ஸஃப்ருல் தெரிவித்தார்.
நாட்டில் அமைச்சரவை மாற்றங்கள் வெகு விரைவில் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




