இஸ்கண்டார் புத்ரி, நவ 13- நாட்டில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) மன்றத்தை அமைக்கும் முதல் மாநிலமாக ஜொகூர் விளங்கவிருக்கிறது
இந்த தகவலை ஜொகூர் மாநில கல்வி மற்றும் தகவல் குழுவின் தலைவர் அஸ்னான் டாமின் இதனைத் தெரிவித்தார்.
மாநிலத்தில் AI தொடர்பான பல்வேறு முயற்சிகள், கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க இந்தப் பேரவை அவசியம் என்று அவர் கூறினார்.
"மாநிலத்தில் AI மையத்தை உருவாக்க விரும்பிய துங்கு மகோத்தா இஸ்மாயில் அவர்களின் விருப்பத்தை ஆதரிக்கவே இந்த AI பேரவை நிறுவப்பட்டது. ஒரு குறிப்பிட்ட ஒருங்கிணைப்பு நிறுவனம் இல்லாமல், அந்த இலக்கை நோக்கிய முயற்சிகளை முன்னெடுப்பது கடினம்" என்று சட்டமன்றக் கூட்டத்தில் 2026 ஜோகூர் பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்தக் குழுவில் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் ICT தொடர்பான அரசு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசு சாரா AI நிபுணர்கள் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
மேலும், மாநிலத்தின் AI செயல் திட்டத்தை விரைவுபடுத்த பல AI விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பட்டறைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.




