கோலாலம்பூர், நவ 12- வேறு கருத்துடைய அல்லது அரசியல் கொள்கையுடைய ஊடகங்கள் மீது அரசாங்கம் நடவடிக்கை எதுவும் எடுக்காது. ஊடக சுதந்திரத்தை மடாணி அரசாங்கம் மதித்து நடப்பதாக தொடர்பு அமைச்சின் துணையமைச்சர் தியோ நீ சிங் கூறினார்.
முந்தைய அரசாங்கத்தைக் காட்டிலும் நடப்பில் உள்ள மடாணி அரசாங்கம் ஊடக சுதந்திரத்தைப் பேணி வருகிறது. எந்தவொரு ஊடகங்கள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.
ஊடகத்தின் மாண்பினை மேலோங்க செய்ய அரசாங்கம் மலேசிய ஊடகவியல் மன்றம் ஒன்றை தோற்றுவிட்டது. ஊடகங்களின் திறனை மேம்படுத்த பல உருமாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டதாக நாடாளுமன்ற தியோ நீ சிங் விளக்கினார்.
முன்னதாக, ஊடகத்தை பாதுகாக்க அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகள் என்னென்ன என்பது பற்றி தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ ஹஸ்னி முஹம்மட் எழுப்பிய கேள்விக்குத் துணையமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.


