புத்ராஜெயா, நவ 12- நாட்டின் ஒற்றுமையைப் பேணுவதில் அனைத்து தரப்பினரும் முனைப்பு காட்ட வேண்டும். மாறாக, வெற்றியின் மகிழ்ச்சியில் இருந்து விட வேண்டாம் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
மலேசியா போன்ற சிறிய நாடு தற்போது வளர்ந்து வரும் நாடாக திகழ்ந்து வருகிறது. ஆக, ஒருமைப்பாட்டு சிந்தனை, சிறந்த நிர்வாக தன்மை, நிலைத்தன்மை ஆகியவை தொடர்ந்து காக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
நாட்டிற்கு எதிரான கலவரம் வெளியிலிருந்து மட்டும் வராது. மாறாக, சொந்த நாட்டு மக்களால் கூட ஏற்படும் சாத்தியம் இருப்பதாக இன்று நடைபெற்ற பிரதமர் துறை ஊழியர்களுடனான சந்திப்பின் போது அன்வார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டின் அரசியல் நிலைத்தன்மையோடு இருக்க வேண்டும். இதனால் நாட்டின் நிர்வாக தன்மை சிறப்பாக செயல்படும். இல்லையென்றால், நாட்டு மக்கள் மத்தியில் தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.




