ஷா ஆலம், நவ 11 — அடுத்தாண்டுக்கான சிலாங்கூர் பட்ஜெட்டில் இந்திய சமூகத்தின் பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிக்க ஐ-சீட் (I-Seed) உதவி திட்டத்திற்கு சிலாங்கூர் மாநில அரசு கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கூடுதல் நிதி சிறு தொழில்முனைவோர் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கும், அவர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் அவசியம் என தெரத்தாய் தொகுதியின் இந்தியச் சமூகத் தலைவர் கே. சரஸ்வதி தேவி குறிப்பிட்டார். இதன் மூலம் சமூகத்தின் பொருளாதார நிலை மேம்படும் எனும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அதோடு, தனி வியாபாரம் துவங்க விரும்பும் பல்கலைக்கழகப் பட்டதாரிகளுக்கு சிறப்பு நிதி ஒதுக்கப்பட வேண்டும்,” என்றும் அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், இதன் மூலம் இந்திய இளைஞர்களின் திறமைகளை மேம்படுத்தி தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கும் என அவர் கூறினார்.
இந்த ஆண்டு ஐ-சிட் திட்டத்திற்கு RM1 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில், 410 இந்திய தொழில்முனைவோர் இத்திட்டத்தின் முலம் பயன் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது




