சுங்கை துவா, நவ 11 - சிலாங்கூர் மக்களுக்காக தொழில்முனைவோர் திறன் பயிற்சி வகுப்பை சுங்கை துவா தொகுதியின் இந்தியச் சமூகத் தலைவர் வீரையா, ஏற்பாடு செய்துள்ளார். இந்த வகுப்பு மூலம், உள்ளூர் மக்கள் தொழில்முனைவோராக தங்கள் திறன்களை மேம்படுத்தலாம்.
இந்த பயிற்சி வகுப்பு எதிர்வரும் டிசம்பர் 14, 2025 அன்று, காலை 8.00 மணி முதல் மாலை 2.00 மணி வரை பெங்குலு முக்கிம் பத்து, பத்து கேவ்ஸ் அலுவலகத்தில் நடைபெறும். இந்த வகுப்பில் ஹென்னா மற்றும் ஓவியக் கலை (Henna Mixology and Drawing Class) கற்று தரப்படும்.
இந்த நிகழ்வில் இலவச பயிற்சி, சான்றிதழ், காலை, மதிய உணவு மற்றும் இலவச ஹென்னா கிட் ஆகியவை வழங்கப்படும்.
ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழுப் பெயர், அடையாள அட்டை எண், தொடர்பு எண் ஆகிய விவரங்களை வழங்கி முன்பதிவு செய்ய வேண்டும். முதலில் பதிவு செய்பவர்களுக்கே இதில் வாய்ப்பு வழங்கப்படும். மேலும், இதற்கு முன் இலவச வகுப்புகளில் பங்கேற்காதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இப்பயிற்சிக்கான இருக்கைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. விருப்பமுள்ளவர்கள் உடனே 019-7548597 (வினோஷா) என்ற எண்ணிற்கு புலனம் (வாட்ஸ்ஆப்) மூலம் விவரங்களை அனுப்ப வேண்டும்.





